வாழ்வில் ஒளி வீசும் அன்பு


“முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8).

இவையெல்லாம் வாசிப்பதற்கு அல்லது கேட்பதற்கு மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ‘நீர் என்னை அந்தகாரத்தின் இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்தீர், ஸ்தோத்திரம்’ என்று நாம் ஜெபிக்கும்போது ஆவியிலே திளைத்துப்போகிறோம். நீங்கள் உலகிற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்று இயேசு சொன்னது நமக்கு மனப்பாடம்.

தேவனுடைய வழியில் நானா? என் வழியில் தேவனா?

சாந்தி பொன்னு

இந்தப் பக்கத்தைப் புரட்டிப்பார்க்கும் இந்த விநாடியில் நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை நான் அறியாவிட்டாலும், ஒன்று நிச்சயம். ஒரு சிறு குழப்பம், ஒரு சிறு சலனம், ஒரு சிறு சிடுசிடுப்பு, ஒரு எதிர்பார்ப்பு அதைத் தொடர்ந்து அங்கலாய்ப்பு, இல்லையானால் கோபம் பழிவாங்கல் இப்படி ஏதோவொரு உணர்வினால் மனிதனுடைய உள்ளம் குழம்பி தவித்தபடியே இருக்கும் என்பதை மறுக்கமுடியாது. சாதாரணமாக நூற்றில் தொண்ணூற்றொன்பது பேரும் இப்படி ஏதோவொரு போராட்டத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? இதுதானா மனிதனின் நிலைமை?

நீ பிழியப்பட ஆயத்தமா?


சகோதரி.சாந்தி பொன்னு


தூக்குதண்டனைக் கைதிகளின் மனநிலையை சிந்தித்துப் பார்த்திருப்பீர்களா? சாவு நிச்சயம் என்பது ஒருபுறம்; இந் நிலையில் அன்பான அப்பா அம்மா யாராவது அருகில் இருக்க மாட்டார்களா? இத் தண்டனை அதிசயமாக மாற்றப்படமாட்டாதா? தூக்கிலிடும்போது எப்படியிருக்கும்? இப்படியாக எத்தனை எண்ணங்கள் மனதிலே புரண்டோடும் தெரியுமா? மரணப்போராட்டத்தில் நோயுற்று இருந்த அனுபவம் உங்களுக்குண்டா? மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில், எந்த வொரு உறவினரும் அருகில் இருக்க முடியாத சூழ்நிலையில், அதேசமயம் உள்உணர்வு மங்கிப்போகாதிருக்க மனதில் என்னவெல்லாம் எண்ணங்கள் புரண்டோடும் தெரியுமா? உறவுகள் சூழ இருந்தும், சூனியமான மனநிலையில், நீங்கள் தவித்திருக்கிறீர்களா? அது மகாபெரிய கொடுமை!

என்னை ஆராய்ந்து பாரும் கர்த்தாவே!


சகோதரி சாந்தி பொன்னு

நமது ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில், அனைவருக்கும் என் அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டு வந்ததும், இவ் வருடத்திற்குரிய வாக்குத்தத்தம் என்ன என்று தேடுகிறவர்கள் அநேகர். பரிசுத்த வேதம் முழுவதையுமே கர்த்தர், வாக்குத்தத்தமாகவே கொடுத்திருக்கிறார். பின்னர் ஏன் இந்தத் தேடுகை?

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ் சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்” (1கொரி. 1:8).

கடவுள் நமக்காகவே மனிதன் ஆனார்!


- சாந்தி பொன்னு

கடந்த ஆண்டிலே, 19வயது மாத்திரமே நிரம்பிய ஒரு அழகான வாலிபனுடைய சாவு பல கேள்விகளை எழுப்பிவிட்டிருந்தது. அந்தப் பையன் சாத்தானைத் தொழுது கொள்ளுகின்ற ஒருவன் என்றும், அவனுடைய நடவடிக்கைகளும் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றும், சாத்தானைத் தொழுது கொள்ளும் ஒரு கூட்டம் மக்களும், தொழுகைக்கான இடமும் நமது தேசத்திலேயே இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவலும் அந்த மரணவீட்டிலே நாங்கள் அறிந்த தகவல்கள்.

நாமும் முதியோரும் - part 1.

சகோதரி சாந்தி பொன்னு
நன்றி - விருத்தாப்பியம் 


மனிதா உன் விலை என்ன?

தாயின் வயிற்றில் உதித்தது முதல்
தரணியில் விதையாய் மறையும்வரை
மனிதா உன் வாழ்வின் விலை
மதிக்கமுடியுமா நீ சொல்லு!

தவழும் குழந்தை என்றுன்னைத் தள்ளிடவா
அறியாப் பருவம் என்றுன்னை அதட்டிடவா
வீறுகொண்ட வாலிபனே உன் வேரறுக்கவா
வீராப்புடையவன் என்று கணக்குரைக்கவா!

தாழ்வின் உயர்விலை நீயே அறியாயோ?
உன் காலம்முடிந்தாலும் அதை நீயுணராயோ?

மூப்பிலும் நீ உயர்ந்தவன்
மூச்சு நிற்கையிலும் நீ சிறந்தவன்.
விருத்தாப்பியமும் பேசும் உன் வாழ்விற்கோர் அர்த்தம்,
விருதாவா மனிதவாழ்வு யார் சொன்னார் தப்பர்த்தம்?

படைத்தவன் பிரதி நீ, படைப்புக்கெல்லாம் மகுடமும் நீ
பலங் கெட்ட நேரத்திலும் படைத்திடு உன் சரித்திரத்தை!
உலகை நீ மறந்தாலும் உலகம் உன்னை மறக்காது
விதையாய் நீ சாகும்போதும் தொடர்ந்திடும் உன் அடிச்சுவடு!

“விருத்தாப்பியம்” என்ற கைநூலின் தொடர்ச்சியாக மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நாமும் முதியோரும் - part 2

சகோதரி சாந்தி பொன்னு
நன்றி - விருத்தாப்பியம் 


முதியோர் ஆசீர்வாதத்தின் பாத்திரங்கள்!

பிரியமானவர்களே! சுருக்கம் விழுந்த உங்கள் தாயின் முகத்தை உற்றுப்பார்த்திருக்கிறீர்களா! அவருடைய இளவயதின் பொலிவு, பத்து மாதங்கள் உங்களைத் தன் வயிற்றில் சுமக்கையில் அவர் அடைந்த சுகதுக்கங்கள், நோவெடுத்து அவதியுற்று உங்களைப் பெற்றுக் கைகளில் ஏந்தியபோது உங்கள் பிஞ்சு முகத்தைப் பார்த்து மலர்ந்த அந்தத் தாய் முகம், கண்கள் மூடிப் பால் உமிழும் உங்கள் முகத்தை ரசித்து ரசித்து, முதல் முளைத்த உங்கள் தலைமயிரை வருடிவிட்ட அழகான விரல்கள் இவற்றையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்காமல் இருப்பது எப்படி?

புதிய உடன்படிக்கையின் இரத்தம் - பகுதி 1.

சகோதரி சாந்தி பொன்னு

“சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்” (எபி. 10:26-29).

புதிய உடன்படிக்கையின் இரத்தம் - பகுதி 2.

சகோதரி சாந்தி பொன்னு

நாடுகள், குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படுகின்ற ஏராளமான ஒப்பந்தங்களில் எத்தனை முறிந்துபோகின்றன, எத்தனை நிறைவேற்றப்படுகின்றன? உடன்படிக்கை, ஒப்பந்தம்; இவ்விரண்டிலும் இரு நபர்கள் அல்லது இரு குழுக்கள் சம்பந்தப்படுவதில் ஒருமைப்பாடு தென்பட்டாலும், முக்கிய வேறுபாடும் உண்டு.

பல கேள்விகள் ஒரே பதில்!

சகோதரி சாந்தி பொன்னு

வாசகர்களுக்கு என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கர்த்தர்தாமே, வரப்போகின்ற புதிய ஆண்டிலும் உங்களை நிறைவாகவே ஆசீர்வதிப்பாராக.

“கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால், அவரிடத்திலே நம்பிக்கை கொண்டிருப்பேன்” (புலம்.3:24) எரேமியா இப்படிக் கூறுவதற்குக் காரணமாய் அமைந்தது, தேவனுடைய உண்மைத்துவத்தில் எரேமியா கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையேயாகும்.